Saturday, May 12, 2012

TUPPERWARE

                                  TUPPERWARE

FRIENDS GET TUPPERWARE PRODUCTS 

FOR 15% TO 20% OFFER


Tupperware products give a  fresh style to your lunch, a fresh feel to your drinking style and a fresh look to our storing style.

THINK FRESH

                 START FRESH 

                                    & STORE FRESH

USE TUPPERWARE FOR A HEALTHY LIFE

GO ECHO AND KEEP OUR EARTH POLLUTED FREE


mottai paappaathi

                                                                                                       மொட்டைப்பாப்பாத்தி 


"மொட்டைப் பாப்பாத்தி
ரொட்டிச் சுட்டாளாம்
எண்ணப் பத்தலையாம்
கடைக்குப் போனாளாம்
காசுப் பத்தலையாம்
கடக்காரணப் பாத்துக் கண்ணடித்தாளாம்"

yaanai yaanai

                             யானை யானை 


                           "யானை யானை அழகர் யானை

                            அழகரும்ச் சொக்கரும் ஏறும் யானை

                            கட்டுக்கரும்பை முறிக்கும் யானை

                            காவேரி நீரைக் கலக்கும் யானை"

PAAPPA PAATTU

                                    மொட்டை 


                        " மொட்டையும் மொட்டையும் சேர்ந்துச்சாம்   
                          முருங்கமரத்துல ஏறுச்சாம் 
                          கட்டெறும்பு கடிச்சுசாம் 
                           காலுக்காலுன்னு கத்துச்சாம் " 




                                                        

Friday, May 11, 2012

ninaivugal

நினைவுகள் இனிமையானது, அதுவும் நம் சிறுவயது பள்ளி காலங்களின் நினைவலைகள் அற்புதமானவை. பள்ளி பருவத்தை மீண்டும் கொணர்ந்த  எங்கள் பள்ளித் தோழர்களுக்கு நன்றி. Dr. Lee பள்ளியில் படித்தபோது எங்கள் தோழி ஒருத்தி நன்றாக பாட்டு பாடுவாள், டான்ஸ் ஆடுவாள், நன்றாக வாயாடுவாள். ஆனால் அவளுக்கு ஒரு பழக்கம் இருந்தது, எப்பொழுதும் வாய் அரைத்துக் கொண்டே இருக்கும். ஆம், அவள் புத்தகங்களின் ஓரங்கள் கிழிந்திருக்கும். ஆம் ஏன் தோழி புத்தகங்களை கரைத்துக் (அரைத்து) குடிப்பாள். பேப்பர் தின்றுக் கொண்டே இருப்பாள். நாங்கள் டான் நம்பர் 1, என்று அழைப்போம். ஆனால் இன்று தான் புரிக்கிறது அவளுக்கு எழுத்துக்களின் மேல் எத்தனை காதல் என்று. என்ன தோழியே, யார் அந்த தோழி என கண்டுப்பிடித்தாயா?

நாங்கள் 3 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை அழிப்பதற்கு எங்களுக்குள் போட்டியாக இருக்கும். ஒரு மதிய உணவு வேளை முடிந்து நாங்கள் வகுப்பில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் கரும்பலகையில் எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். மதிய பாட வேளை 

Monday, April 16, 2012

vilayattu

                                   தமிழ் விளையாட்டுக்கள் 


முன்னுரை: 


நம் தமிழ் நாட்டில் குழந்தைகள் விளையாட்டுக்கள் பல இன்று மறைந்து விட்டன, காரணம் தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட், என பரவி வரும் நாகரிக முன்னேற்றம் தான். தமிழர்கள் பொழுதுபோக்கிலும் நன்மை இருக்குமாறு தான் தமிழர் விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஆம் இன்று உள்ள குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒற்றுமையாக இருப்பது, ஓடி ஆடி விளையாடுவது என நல்ல விசயங்களை இழக்கின்றனர். 

 விளையாட்டுகள்:  

நம் நாட்டில் எத்தனையோ விளையாட்டுக்கள் நம் முன்னோர் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். பல்லாங்குழி, தாயம், சோவி, சொட்டாங்கல், பாண்டி, கண்ணாமூச்சி, சோடி வளையல், ஆடுபுலி, பாம்புக்கட்டம், நொண்டி, எனப் பலவகையான அருமையான விளையாட்டுக்கள் சிறுவர்கள் விளையாட உண்டு. இன்றைய தலைமுறை குழந்தைகளில் எத்தனைப் பேருக்கு இந்த விளையாட்டுக்கள் தெரியும். கோடை விடுமுறையிலும் குழந்தைகளை சுதந்திரமாக விடாமல் ஸ்விம்மிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், ஹிந்தி டியூஷன், மத் டியூஷன், அபாகஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், என இயந்திரத்தனமாக தான் குழந்தைகளை வளர்க்கிறோம். இவை அடிப்படை தேவைகள் என்றாலும் அவர்களின் உடல் மன ஆரோக்கியமும் நமக்கு முக்கியம். தினமும் காலை, மாலை வேலைகளில் வெளிக்காற்றில் வெட்டவெளியில் விளையாடச் செய்யுங்கள்.

பல்லாங்குழி:


பல்லாங்குழி இருவர் விளையாடும் விளையாட்டு. மரப்பலகையில் இரு பக்கமும் ஏழேழு குழிகள் இருக்கும் . ஒவ்வொரு குழியிலும் 5 (அ) 6 (அ ) 12 முத்துக்கள் போடவேண்டும். புளியம்முத்துக்கள் அல்லது சோழிகள் பயன்படுத்தலாம். இருவர் எதிர் எதிராக அமர்ந்து விளையாட வேண்டும். 

                                        சூப் வகைகள் 


                                                       கீரை சூப் 


தேவையானவை:

  • கீரை - 1 கட்டு 
  • பூண்டு - 6  பல் 
  • சீரகம் - 1  டேபிள் ஸ்பூன் 
  • மிளகு - 1  டேபிள் ஸ்பூன் 
  • தக்காளி - 2 
  • உப்பு - தேவையான அளவு 
  • இஞ்சி - சிறிது 
  • நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

கீரையை நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும். பின்பு அதில் 2 சொம்பு நீர் விட்டு தக்காளியை நறுக்கிப் போடவும். சீரகத்தை நன்றாக இடித்துக் கொள்ளவும். மிளகை தனியாக பொடிக்க வேண்டும். சீரகப் பொடியையும், மிளகுப்பொடியையும் கீரையுடன் சேர்க்க வேண்டும். இஞ்சியை இடித்து சேர்க்க வேண்டும். பூண்டை தனியாக இடித்து சேர்க்க வேண்டும். சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும் தனித்தனியாக அம்மியில் பொடித்து போட்டால் ருசியாக இருக்கும். அல்லது அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ்யில் அரைத்துப் போடலாம். இவை அனைத்தையும் கீரையுடன் சேர்க்க வேண்டும். பின்பு 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். குக்கரில் உப்பு சேர்த்து 7 (அ) 8 விசில் வைக்க வேண்டும். பின்பு ஆவி அடங்கியவுடன் கீரை நன்றாக கரண்டியால் மசித்து வடிகட்ட வேண்டும். சூப் கிண்ணங்களில் ஊற்றி கொத்தமல்லி இலைத் தூவி பரிமாறவும். 

அருமையான, ஆரோக்கியமான கீரை சூப் ரெடி. 

இந்த சூப் தயாரிக்க நாம் வேற எந்த மாவுப் பொருட்களையும் சேர்க்காததால் நம் உடலுக்கு தேவையானச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. 

அரைக்கீரை, முருங்கைக்கீரை, சூப் மிகவும் ருசியாக இருக்கும்.

அனைத்து வகையானக் கீரைகளும் பயன்படுத்தலாம்.