தமிழ் விளையாட்டுக்கள்
முன்னுரை:
நம் தமிழ் நாட்டில் குழந்தைகள் விளையாட்டுக்கள் பல இன்று மறைந்து விட்டன, காரணம் தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட், என பரவி வரும் நாகரிக முன்னேற்றம் தான். தமிழர்கள் பொழுதுபோக்கிலும் நன்மை இருக்குமாறு தான் தமிழர் விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஆம் இன்று உள்ள குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒற்றுமையாக இருப்பது, ஓடி ஆடி விளையாடுவது என நல்ல விசயங்களை இழக்கின்றனர்.
விளையாட்டுகள்:
நம் நாட்டில் எத்தனையோ விளையாட்டுக்கள் நம் முன்னோர் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். பல்லாங்குழி, தாயம், சோவி, சொட்டாங்கல், பாண்டி, கண்ணாமூச்சி, சோடி வளையல், ஆடுபுலி, பாம்புக்கட்டம், நொண்டி, எனப் பலவகையான அருமையான விளையாட்டுக்கள் சிறுவர்கள் விளையாட உண்டு. இன்றைய தலைமுறை குழந்தைகளில் எத்தனைப் பேருக்கு இந்த விளையாட்டுக்கள் தெரியும். கோடை விடுமுறையிலும் குழந்தைகளை சுதந்திரமாக விடாமல் ஸ்விம்மிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், ஹிந்தி டியூஷன், மத் டியூஷன், அபாகஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், என இயந்திரத்தனமாக தான் குழந்தைகளை வளர்க்கிறோம். இவை அடிப்படை தேவைகள் என்றாலும் அவர்களின் உடல் மன ஆரோக்கியமும் நமக்கு முக்கியம். தினமும் காலை, மாலை வேலைகளில் வெளிக்காற்றில் வெட்டவெளியில் விளையாடச் செய்யுங்கள்.
பல்லாங்குழி:
பல்லாங்குழி இருவர் விளையாடும் விளையாட்டு. மரப்பலகையில் இரு பக்கமும் ஏழேழு குழிகள் இருக்கும் . ஒவ்வொரு குழியிலும் 5 (அ) 6 (அ ) 12 முத்துக்கள் போடவேண்டும். புளியம்முத்துக்கள் அல்லது சோழிகள் பயன்படுத்தலாம். இருவர் எதிர் எதிராக அமர்ந்து விளையாட வேண்டும்.
No comments:
Post a Comment