சூப் வகைகள்
கீரை சூப்
தேவையானவை:
- கீரை - 1 கட்டு
- பூண்டு - 6 பல்
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 2
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி - சிறிது
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
கீரையை நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும். பின்பு அதில் 2 சொம்பு நீர் விட்டு தக்காளியை நறுக்கிப் போடவும். சீரகத்தை நன்றாக இடித்துக் கொள்ளவும். மிளகை தனியாக பொடிக்க வேண்டும். சீரகப் பொடியையும், மிளகுப்பொடியையும் கீரையுடன் சேர்க்க வேண்டும். இஞ்சியை இடித்து சேர்க்க வேண்டும். பூண்டை தனியாக இடித்து சேர்க்க வேண்டும். சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும் தனித்தனியாக அம்மியில் பொடித்து போட்டால் ருசியாக இருக்கும். அல்லது அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ்யில் அரைத்துப் போடலாம். இவை அனைத்தையும் கீரையுடன் சேர்க்க வேண்டும். பின்பு 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். குக்கரில் உப்பு சேர்த்து 7 (அ) 8 விசில் வைக்க வேண்டும். பின்பு ஆவி அடங்கியவுடன் கீரை நன்றாக கரண்டியால் மசித்து வடிகட்ட வேண்டும். சூப் கிண்ணங்களில் ஊற்றி கொத்தமல்லி இலைத் தூவி பரிமாறவும்.
அருமையான, ஆரோக்கியமான கீரை சூப் ரெடி.
இந்த சூப் தயாரிக்க நாம் வேற எந்த மாவுப் பொருட்களையும் சேர்க்காததால் நம் உடலுக்கு தேவையானச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
அரைக்கீரை, முருங்கைக்கீரை, சூப் மிகவும் ருசியாக இருக்கும்.
அனைத்து வகையானக் கீரைகளும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment