பிரியாணி
தேவையானவை:
1. சிக்கன் ---1/2 கி
2. சி. வெங்காயம் -- 1/2 கி
4. இஞ்சி-- 2
5. பூண்டு-- 25 பல்
6. கரம் மசாலா--தேவையான அளவு
7. நெய் ---100 கி
8. மஞ்சள் தூள் -- 1 தே.கரண்டி
9. மிளகாய் தூள் --- 1 டேபிள் ஸ்பூன்
10. மல்லித்தூள் --- 1 டேபிள் ஸ்பூன்
11. ரீஃபண்ட் ஆயில் -- 200 மி.லி
12. புதினா -- 1 கட்டு
13. மல்லி இலை -- 1 கட்டு
14. உப்பு -- தேவையான அளவு
15. தேங்காய் -- 1
16. பிரியாணி அரிசி -- 1/2 கி
17. பிரியாணி இலை -- 4
அரைக்க:
முதலில் தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். பின்பு மல்லி இலை, புதினா இரண்டையும் பாதியளவு எடுத்துக் கொண்டு அத்துடன் 5 ப.மிளகாய், பாதியளவு வெங்காயம், பூண்டு, இஞ்சி 1, பட்டை, கிராம்பு, மசாலாப் பொருட்கள் தலா 2 போட்டு அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
முதலில் பிரியாணி அரிசியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு அரிசியை லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்பு பிரியாணி செய்யும் பாத்திரத்தில் 100 gm நெய், 2 குழிக்கரண்டி ரீஃபண்ட ஆயில் விட்டு நன்றாக காய்ந்தவுடன் அதில் பட்டை கிராம்பு கரம் மசாலா தூள் போட்டு தாளிக்கவும். அரைத்த மசாலாக் கலவையை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை, இஞ்சி, ஆகிய மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் அளந்து ஊற்றவும். 1 கிளாஸ் அரிசிக்கு 2 கிளாஸ் நீர் என அளக்கவும். சரியான அளவு நீர் விட்டவுடன் அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள் போட்டு கொதிக்கவிடவும்.
ஒரு பக்கம் சிக்கன் அல்லது மட்டனை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் . நீர் அளக்கும் பொது மட்டன் வேக வைத்த நீரையும் சேர்த்து அளக்கவேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் வேக வைத்த மட்டன் (அ ) சிக்கன், அரிசி, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய்யும் ஆயிலும் விட்டு கிளறவும். அடுப்பை சிம் ல் வைத்து அரிசியை மூடி வைக்கவும். அடிக்கடி அரிசி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
அரிசி 3/4 வேக்காட்டில் இருக்கும் போது அடுப்பை அனைத்து விட்டு கனமான தட்டால் பிரியாணியை மூடி வைத்து அதன் மேல் நெருப்புக்கங்கை போட்டு வைக்கவும். நன்றாக தம் ஆனவுடன் சிறிது நேரம் கழித்து பிரியாணியை சூடாக பரிமாறவும்.
தம் வைக்க நெருப்புகங்கு இல்லாவிட்டால் ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைஒது அடுப்பை சிம் ல் வைக்கவும்.
சூடான ருசியான பிரியாணி ரெடி.
No comments:
Post a Comment